வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (15:30 IST)

பாலியல் குறுஞ்செய்தி விவகாரம்; கேப்டன் பதவியிலிருந்து விலகிய டிம் பெய்ன்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான டிம் பெய்ன் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் டிம் பெய்ன். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதே சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக இவர்மீது புகார் இருந்தது. இந்நிலையில் தற்போது தனது கேப்டன் பொறுப்பை பெய்ன் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான்கு வருடங்கள் முன்னதாக சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். ஆனால் தற்போது அந்த குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட உள்ளதாக அறிந்தேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.