1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:46 IST)

ஓய்வை அறிவித்து ஓர் ஆண்டு நிறைவு: ரசிகர்கள் மிஸ் செய்யும் எம்.எஸ்.தோனி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியர்கள் அனைவரும் சுதந்திர தின விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில் திடீரென மாலை நேரத்தில் தல தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்தார் 
 
அவரது ஓய்வு கோடிக்கணக்கான தல ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் பெருமையை சேர்ந்தவர்களில் ஒருவர் தல தோனி என்பதும் அவரது ஓய்வு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பல கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்தனர் .இருப்பினும் ஓய்வு முடிவை அறிவித்த தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தல தோனி தனது ஓய்வை அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை அடுத்து இது குறித்த ஹேஷ்டேக்கை தோனியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகின்றனர்
 
மேலும் தல தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த ஒரு சில மணி நேரங்களில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்தார் என்பதும் அவரும் தனது ஓய்வு முடிவை அறிவித்து இன்றுடன் ஓராண்டு முடிவதற்கு முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது