செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (07:25 IST)

கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்த பெங்களூரு வீரர்! பரபரப்பு தகவல்

கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்த பெங்களூரு வீரர்!
நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 
 
நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியின் டிவிலியர்ஸ் மிக சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதுமட்டுமின்றி அவர் நேற்றைய ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையையும் செய்துள்ளார் 

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கிரிஸ் கெயில் அதிக முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ள நிலையில் அந்த சாதனையை நேற்று ஆட்டநாயகன் விருதை பெற்றதன் மூலம் டிவில்லியர்ஸ் சமன் செய்துள்ளார். கிறிஸ் கெயில் 125 போட்டிகளில் விளையாடி 21 முறை ஆட்டநாயகன் பெற்றுள்ள நிலையில் டிவில்லியர்ஸ் அவர்களும் நேற்று 21வது ஆடநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ரோகித் சர்மா 18 முறையும், தோனி 17 முறையும், டேவிட் வார்னர் 17 முறையும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது