வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (23:47 IST)

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி. புனே பரிதாபம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் புனே அணி கடைசி ஒரு ஓவரில் 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்திருந்த போதிலும் மற்ற நான்கு பந்துகளில் சொதப்பியதால் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.



 


இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\

இந்த போட்டியில் புனே வெற்றி பெற்றிருந்தால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தோல்வி அடைந்ததால் அடுத்த போட்டியின் முடிவினை பொறுத்தே இந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா? இல்லையா? என்பது தெரியவரும்