உலக சாதனையை சமன் செய்த தீபிகா; வில்வித்தை போட்டியில் அசத்தல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 28 ஏப்ரல் 2016 (15:03 IST)
இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
 
 
சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்று விளையாடியானார். தீபிகா மொத்தம் 720 புள்ளிகளுக்கு 686 புள்ளிகள் பெற்றார்.
 
லண்டன் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய வீராங்கனை கி போ பாவ் கடந்த (2015) ஆண்டில் 720–க்கு 686 புள்ளிகள் குவித்ததே உலக சாதனையாகும்.
 
போட்டியின் இடைவெளியின்போது, உலக சாதனை முறியடிக்க தீபிகா குமாரிக்கு 343 புள்ளிகள் தேவைப்பட்டிருந்தது. ஆனால், போட்டியின் முடிவில் தீபிகா குமாரி 342 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :