திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 நவம்பர் 2018 (19:55 IST)

விஜய் படத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்..

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவர் சில நிகழ்வுகலுக்கு டிவிட் செய்து வருகிறார். இதில் தமிழ்நாட்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது தமிழ்மொழியிலேயே பதிவிடுவார்.
தற்போது சர்கார் படத்துடன் தீபாவளித் திருநாளை இணைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
 
அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
 
தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே. புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் தீபஒளி ஆனந்தம். செந்தமிழ் தரணியெங்கும் விவசாயம் செழிக்கட்டும்,சர்க்கரை தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.