செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (10:27 IST)

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மீது செக்ஸ் குற்றச்சாட்டு வைத்த பெண்!

அர்ஜெண்டின கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கடந்த மாதம் இயற்கை எய்தினார்.

கால்பந்து உலகின் ஜாம்பவான் வீரரான அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த மாரடோனா சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான அவர் கியூபாவில் சிகிச்சைப் பெற்ற அவர் அதன் பின்னர் அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் மரணமடைந்தார்.

இந்நிலையில் அவர் இறந்த பின்னர் கியுபாவைச் சேர்ந்த தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மேவிஸ் ஆல்வாரெஸ் தன்னுடைய 16 ஆவது வயதில் தன்னை கட்டாய பாலுறவுக்கு மாரடோனா பயன்படுத்திக் கொண்டார் என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது சம்மந்தமான வழக்கு அர்ஜெண்டினா நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.