புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (19:23 IST)

69 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி: மீண்டும் முதலிடம்

69 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி: மீண்டும் முதலிடம்
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி மிக அபாரமாக 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 191 எடுத்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்
 
இந்த நிலையில் 192 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் அனைவரும் சொதப்பிய காரணத்தால் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. படிக்கல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்தார் 
 
இன்றைய போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்தினார். அவர் 4 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டன் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியால் சிஎஸ்கே அணி  மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது