செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 மே 2018 (21:26 IST)

ராயுடு அபார சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 46வது போட்டியில் ஐதராபாத் அணியை அதிரடியாக வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகள் பெற்றுள்ளது.
 
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது. தவான் 79 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 51 ரன்களும் எடுத்தனர். 
 
இந்த நிலையில் 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, ராயுடு அடித்த அபார சதத்தால் 19 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
 
62 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்த ராயுடு, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.