திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (08:21 IST)

இந்தியாவை உலுக்கும் பறவைக்காய்ச்சல்! – பாதித்த மாநிலங்கள் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் பறவைக்காய்ச்சலால் பல பறவைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் தொற்று பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில் புதிதாக தோன்றியுள்ள பறவைக்காய்ச்சல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதலில் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சல் பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியிலும் காகங்கள், வாத்துகள் இறந்து கிடந்த நிலையில் அவற்றை பரிசோதனை செய்ததில் அவற்றிற்கு பறவைக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. டெல்லியை தொடர்ந்து உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது.