ஐபிஎல் தொடக்க விழா பட்ஜெட் கட்: காரணம் என்ன?
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் 11 வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக 8 அணிகள் ஏற்கனவே தயாராகவுள்ளது.
இந்நிலையில் 11 வது ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுது. இதன்படி முதல் போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டிகள் துவங்குவதற்கு முன் எப்போதும் ஐபிஎல் துவக்க விழா நடப்பது வழக்கம். துவக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், முன்னதாக ஐபிஎல் 2018 தொடக்க விழாவுக்கான பட்ஜெட்டாக ரூ.50 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் ரூ.20 கோடி குறைக்கப்பட்டு ரூ.30 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துவக்க விழா தேதி மாற்றம், பட்ஜெட் குறைப்புக்கான சரியான காரணங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், போட்டிகள் மட்டும் அட்டவணையில் வெளியிட்டது போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.