1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:42 IST)

குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் லவ்லினா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. 

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக மல்யுத்தத்தில் இரு இந்திய வீரர்கள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் கிடைத்துள்ளது. ஆம், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடை பிரிவின் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கலம் வென்றார் லவ்லினா.