செவ்வாய், 25 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (12:22 IST)

3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி அதிரடி முடிவு!

india - bangaldesh
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் ஏற்கனவே வங்கதேச அணி இரண்டு போட்டிகளில் வென்று தொடரை வென்று விட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் 3 ரன்களில் அவுட் ஆனது அடுத்தை தற்போது இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுகின்றனர்.
 
 இந்திய அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு போட்டியிலாவது இந்தியா வென்றால் தான் ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்றும் இல்லையெனில் வாஷ் அவுட் ஆகும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran