1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (05:52 IST)

போல்ட் ஆனதற்கு கூட டி.ஆர்.எஸ் கேட்ட வங்கதேச வீரர்? காமெடியின் உச்சகட்டம்

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி  259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒருசில வினோதங்கள் நடந்தது.




 


ஏற்கனவே பேட்ஸ்மேன் சிக்சர் அடித்த போது விக்கெட் விழுந்துவிட்டதாக நினைத்து வங்கதேச பவுலர் குதித்து கொண்டாடிய காமெடி ஃபேஸ்புக், டுவிட்டரில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போல்ட் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ் கேட்ட வங்க தேச வீரர் தற்போது காமெடி ஹீரோவாக ஆகியுள்ளார். அசேலா குனரத்னே வீசிய பந்தை எதிர்கொண்ட வங்கதேச வீரர் செளம்யா சர்கர், க்ளின் போல்ட் ஆனார் ஆனால் போல்ட் ஆனதை கூட அறியாமல் அம்பயர் அவுட் என்றதும் டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார். ஆனால் அதன் பின்னர், தான் க்ளீன் போல்ட் ஆனதை அறிந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.