ஆளில்லாத மைதானம்… பந்துகளைத் தேடிய பீல்டர்கள் – முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி !

Last Modified சனி, 14 மார்ச் 2020 (07:50 IST)

ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா பீதி அதிகமாக இருப்பதால் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இல்லாத காலியான மைதானத்தில் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வார்னர், பின்ச் மற்றும் லபுஷான் ஆகியோரின் அரைசதத்தால் 258 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தினறினர். அந்த அணியில் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடாததால் போட்டி 41 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது வீரர்களே சிக்ஸர்களுக்கு சென்ற பந்துகளை தேடி எடுத்தது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :