செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (21:48 IST)

இலங்கை வீராங்கனையின் அதிரடி சதம் வீண்: 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 195 ரன்கள் எடுத்தது. இலங்கை கிரிக்கெட் வீராங்கனை ஜெயங்கனி அதிரடி சதமடித்து 103 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 26.5 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹீலே 112 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதினை வென்றார்.