1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:40 IST)

உலகக்கோப்பை டி20 போட்டி: வென்ற என்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு!

aus vs sri
உலகக்கோப்பை டி20 போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இலங்கை அணி சற்று முன் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியுள்ளது 
 
இன்றைய போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல அந்த அணி கூடுதல் முயற்சி எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரு அணிகளிலும் உள்ள விளையாடும் பதினோரு பெயர்கள் கொண்ட பட்டியல் தற்போது பார்ப்போம்
 
இலங்கை: நிச்சாங்கா, மெண்டிஸ், தனஞ்செயா, அசலாங்கா, ராஜபக்சே, ஷனகா, ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, தீக்‌ஷனா, பெர்னாண்டோ, லஹிரு குமாரா
 
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், பின்ச், மார்ஷல், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், டிம் டேவிட், மாத்யூ வேட், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆஷ்டன் அகர், ஹாசில்வுட்,
 
Edited by Siva