1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. asian cup final today between india vs srilanka

ஆசிய கோப்பை சாம்பியன் யார்? இன்று இந்தியா - இலங்கை மோதல்..!

ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது.  
 
கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. லீக் போட்டியில் இந்தியா 4 புள்ளிகளும் இலங்கை 4 புள்ளிகளும் எடுத்துள்ளதை அடுத்து இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.  
 
இந்தியா  லீக் போட்டிகளில் மூன்று வெற்றியும் இலங்கையும் மூன்று வெற்றியும் பெற்றுள்ளதால் இரு அணிகளும் கிட்டத்தட்ட சம வலிமையில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இன்றைய போட்டியில்  இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியும் கோப்பையை கைப்பற்றுவதற்கு தீவிரமாக முயற்சி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆசியகோப்பை இறுதிப் போட்டியில் இடம்பெற்ற தமிழக வீரர்