வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 நவம்பர் 2021 (14:37 IST)

4 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… ஆனாலும் கலக்கிய அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று டி 20 போட்டியில் களமிறங்கினார்.

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான அஸ்வின், சில ஆண்டுகளாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு டி 20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இதையடுத்து நேற்றைய போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார்.

கடைசியாக 2017 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்காக சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய அவர் நேற்று சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி தன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.