நாளை இருக்கிறது, நம்பிக்கையை இழக்க வேண்டாம்: காவ்யா மாறனுக்கு பிரபல நடிகர் ஆறுதல்..!
நேற்றைய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததும் காவ்யா மாறன் கண்ணீர் விட்ட நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் பிரபல நடிகர் அமிதாபச்சன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி மிக எளிதாக வென்றது என்பதும், ஒரு ஐபிஎல் பைனல் போலவே இல்லாமல் சாதாரண லீக் மேட்ச் விட மிக மோசமாக இருந்ததாக இந்த போட்டியை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தங்களது அணி வெல்லும் என்று காவ்யா மாறன் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர் கண்ணீர் விட்டார். ஆனால் அந்த கண்ணீரை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர் திரும்பி நின்று அழுதது வீடியோவில் தெரிய வந்தது.
இதனை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இது குறித்து கூறியிருப்பதாவது: ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. மைதானத்தில் தோல்விக்கு பிறகு அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுததை பார்த்து மனம் வருத்தம் அடைந்தேன். கேமராக்களில் இருந்து முகத்தை திருப்பி அவர் தனது கண்ணீரை மறைத்தார், அவருக்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதே நேரத்தில் நாளை இருக்கிறது என்ற நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.
Edited by Mahendran