செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sasikala
Last Modified: சனி, 10 டிசம்பர் 2016 (12:30 IST)

மீண்டும் பாட்மிண்டன் பிரீமியர் லீக்கில் சச்சினுடன் கைகோர்க்கும் சிரஞ்சீவி, நாகார்ஜுனா!!

பாட்மிண்டன் பிரீமியர் லீக் தொடருக்கான பெங்களூரு அணியை சச்சினுடன் இணைந்து நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகியோர் வாங்கியுள்ளனர். ஏற்கனவே ஐ.எஸ்.எல் கால்பந்து தொடருக்கான கேரள அணியை சச்சினுடன் சேர்ந்து நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அல்லு அரவிந்த் மற்றும் தொழிலதிபர் நிம்மகடா பிரசாத் ஆகியோர் வாங்கிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

 
இந்த தகவலை பெங்களூரு அணியின் உரிமையாளர்களில் ஒருவரான தொழிலதிபர் நிம்மகடா பிரசாத் உறுதி செய்துள்ளார். சச்சின் பெங்களூரு அணியை வாங்கியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள முன்னாள் பாட்மிண்டன் வீரர் கோபிசந்த்,’பாட்மிண்டன் சூப்பர் லீக் தொடரில் சச்சின் இணைந்திருப்பதால், இந்திய மக்களிடையே பாட்மிண்டன் விளையாட்டு கவனம் பெறும்.”என கூறியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து சச்சின் கருத்து தெரிவிக்கையில் ”பேட்மிண்டன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கியமான விளையாட்டு. இந்த விளையாட்டு இந்தியாவில் கவனம் பெற்றால், ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். மேலும் பேட்மிண்டன் பிரீமியர் லீக் தொடரில் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.