கோலிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவரை மொய்க்கும் விளம்பர நிறுவனங்கள்!

Last Updated: வியாழன், 14 ஜனவரி 2021 (10:41 IST)

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து கோலியை விளம்பர நிறுவனங்கள் மொய்க்க ஆரம்பித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் பாலிவுட் அனுஷ்கா சர்மா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவருக்கு ஜனவரி மாதத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அனுஷ்கா சர்மாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோலியை குழந்தைகள் பயன்படுத்தும் நாப்கின், பொம்மைகள் மற்றும் ஷுக்கள் சம்மந்தப்படட் விளம்பரங்களில் நடிக்க விளம்பர நிறுவனங்கள் அதிகளவில் போட்டி போட ஆரம்பித்துள்ளனவாம்.இதில் மேலும் படிக்கவும் :