1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2016 (12:10 IST)

இங்கிலாந்து வீரர் ஆமிர்கான், ‘விஜேந்தரின் குத்துச்சண்டை வாழ்க்கையை அழித்து விடுவேன்’ என எச்சரிக்கை

இங்கிலாந்து வீரர் ஆமிர்கான், ‘விஜேந்தரின் குத்துச்சண்டை வாழ்க்கையை அழித்து விடுவேன்’ என எச்சரிக்கை

‘என்னுடன் மோதினால், விஜேந்தரின் குத்துச்சண்டை வாழ்க்கையை அடியோடு அழித்து விடுவேன்’ என பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து வீரர் ஆமிர் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 


குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் களமிறங்கியிருக்கும் வீரர் விஜேந்தர் சிங். இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள அவர், தோல்வியே கண்டதில்லை. சமீபத்தில் டெல்லியில் நடந்த போட்டியில், பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம், உலக தரவரிசையில் விஜேந்தர் டாப்-15 இடத்திற்குள் வந்து விட்டார். இதையடுத்து இங்கிலாந்து வீரர் ஆமிர் கானுடன் மோத, ஆவலுடன் இருப்பதாக விஜேந்தர் கூறி உள்ளார்.

இது குறித்து ஆமிர்கான், விஜேந்தரின் சவால் வேடிக்கையாக உள்ளது. அவர் என்னுடன் மோதினால், அவருடைய குத்துச்சண்டை வாழ்க்கையை அடியோடு அழித்து விடுவேன். என்னைப் போன்ற பெரிய வீரர்களை சவாலுக்கு அழைக்கும் முன்பாக, அவருடைய அனுபவத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும், விஜேந்தருடன் மோத எனக்கும் ஆர்வமாகத்தான் இருக்கிறது. அதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகள் அவர் அனுபவம் பெற வேண்டும். விஜேந்தரும் நல்ல திறமையானவர். அடுத்த 10 மோதல்கள் அவருக்கு மிக முக்கியமானதாக அமையும். நல்ல அனுபவத்தையும் தரும் என அவர் கூறினார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்