ஓய்வு பெற்ற மறுநாளே பார்த்தீவ் பட்டேலுக்கு புதிய பதவி!
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வந்த பார்த்தீவ் பட்டேல் சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஓய்வுபெற்ற மறுநாளே அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
17 வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வருகைதந்த பார்த்தீவ் பட்டேல் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியிலும் ஐபிஎல் அணியிலும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த நிலையில் டிசம்பர் 9-ஆம் தேதி அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து தனது அனைத்து கேப்டன்களுக்கும் நன்றி என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்
இந்த நிலையில் பார்த்தீவ் பட்டேல் டிசம்பர் 9ஆம் தேதி தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் டிசம்பர் 10-ஆம் தேதியே அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பதவி ஒன்று கொடுக்கப் பட்டுள்ளது. தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் திறமைகளை கண்டறியும் குழுவில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பார்த்தீவ் பட்டேல் போன்ற சிறந்த வீரர்களை பயன்படுத்திக் கொள்வதால் தான் மும்பை அணி இத்தனை முறை சாம்பியன் பட்டம் பெற்றதற்கு காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது