திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (10:42 IST)

300 ரன்களை தாண்டிய இலக்கு.. இந்தியாவை வெல்லுமா நியூசிலாந்து?

india bat
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த நிலையில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்ரேயாஸ் அய்யர் மிக அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார் என்பதும் அதேபோல் தவான் மற்றும் கில் அரைசதம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் 307 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில் இந்தியாவை நியூசிலாந்து வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran