செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (20:50 IST)

இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்தது 
 
வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. முதல் போட்டியில் அசத்தலாக விளையாடி வெற்றிக்கு காரணமாக இருந்த முசாபர் ரஹீம் இந்த போட்டியில் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார்
 
தொடக்க ஆட்டக்காரரான லிட்டந்தாஸ் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தாலும் 29 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பண்ட் அவரை ரன் அவுட் செய்து வெளியேற்றியதால் வங்கதேச அணிக்கு  பின்னடைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர், கேகே அகமது, மற்றும் சஹார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது