1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (18:02 IST)

பிரபல கால்பந்து நட்சத்திரத்திற்கு 4 ஆண்டுகள் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி

Paul Pogba,
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் பால் போக்பா, ஊக்கமருத்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் விளையாட  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், கால்பந்து விளையாட்டு  நட்சத்திரங்களான மெஸ்சி, ரொனால்டோ போன்ற விளையாட்டு வீரர்களுக்கு என குறிப்பிட்ட ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.  அவர்களின் சமூக வலைதள் கணக்குகளை பின்தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் பால் போக்பா. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில், இவரது   ஊக்க மருந்து பயன்படுத்தியாக இவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சீரி ஏ தொடரின்போது, நடத்தப்பட்ட சோதனையில் அவரது  உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது.  எனினும் அவர் அப்போடியில் விளையாடவில்லை. 
 
இந்த நிலையில், தன் மீதான  குற்றச்சாட்டு மற்றும் கால்பந்து விளையாட தடைவிதித்த பற்றி பல போக்பா குற்றச்சாட்டு  பற்றி அவர் ,  நான் கட்டியெழுப்பிய எனது விளையாட்டு பயணமே என்னை விட்டுப் போய்விட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.