திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. விளையாட்டு
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : திங்கள், 12 மே 2014 (18:04 IST)

நேர்மையை காட்டிய கெய்ல்! ஆனா... டைவ் அடிக்கலாமா?

இந்த ஐபிஎல். தொடரில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பாச்சா இதுவரை பலிக்கவில்லை. ஸ்பின்னர்கள் அவரை படுத்தி எடுக்கின்றனர்.
 
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பின்னர்களான டாம்பே, ராகுல் டெவாட்டியா ஆகியோர் தங்களது கூக்ளியினால் அவரைப் படுத்தி எடுத்தனர்.
 
8வது ஓவர் வரை நின்று 19 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. 8வது ஓவரௌஇ முதியவர் தாம்பே வீச பந்து கூக்ளி ஆகி இவரது மட்டையக் கடந்து சென்றது ஏற்கனவே வெளியில் இருந்த கெய்ல் மீண்டும் கிரீசிற்குள் நேரத்திற்கு வந்து தப்பினார்.
 
அடுத்த பந்து மீண்டும் வைட், கெய்ல் அதை கட் செய்ய முயன்றார் பந்து எட்ஜ் எடுத்தது ஒருவருக்கும் காதில் விழவில்லை. நடுவரும் வைட் கொடுக்க தயாரானார். ஆனால் கெய்ல் ஏற்கனவே அது எட்ஜ் என்று அறிந்து நடையைக் கட்ட தொடங்கினார். மிகவும் அரிதான ஒரு நேர்மையை அவர் வெளிப்படுத்தினார்.
 
அதிசய டைவ் அடித்த கெய்ல்...!

எப்போதும் சோம்பேறியாகக் காணப்படும் கெய்ல் நேற்று அதிசயமாக டைவ் அடித்து பீல்ட் செய்தார். ராஜஸ்தான் 4வது ஓவரில் இருந்தபோது அஜின்கியா ரஹானே அடித்த ஸ்கொயர் டிரைவை பேக்வர்ட் பாயிண்டில் இருந்த கெய்ல் மிக அதிசயமாக டைவ் அடித்து நிறுத்தினார்.
 
ரசிகர்களுக்கு இது பெரிய தமாஷாக அமைந்தது. கெய்லும் சிரித்த படியே உட்கார்ந்திருந்தார். ஆனால் பிறகுதான் தெரிந்தது ஐஸ் பேக்குடன் அவர் தோள்பட்டை காயத்துடன் வெளியேறியது.
 
வெஸ்ட் இண்டீஸுக்கு இத்தனை விஸ்வாசமாக இருந்திருப்பாரா கெய்ல்?