வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Ashok
Last Updated : புதன், 27 ஜனவரி 2016 (13:33 IST)

சினி பாப்கார்ன் - பத்ம விருதுகளும் பாலிடிக்ஸும்

ஐயாயிரம் கோடிகளை தாண்டிய ஸ்டார் வார்ஸ்


 
 
ஸ்டார் வார்ஸ் ஏழாவது பாகம் யுஎஸ்ஸில் 5000 கோடிகளை கடந்துள்ளது. படத்தைப் பார்த்தவர்கள், படம் அவ்வளவு வெர்த் இல்லை என்று சலித்துக் கொள்ள, பாக்ஸ் ஆபிஸில் படம் இன்னும் பட்டையை கிளப்புகிறது. நல்லாயில்லை என்று சொல்லும் படங்கள் வசூலை அள்ளும் காலம் போலிருக்கிறது இது.
 
6 வாரங்கள் முடிவில் யுஎஸ்ஸில் மட்டும் 879.29 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது. கிட்டத்தட்ட 5500 கோடிகள் வருகிறது.
 
விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஒட்டு மொத்த பாராட்டைப் பெற்ற, த ரெவனென்ட் இதுவரை 119.19 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படங்கள் குறைவாகத்தான் வசூலிக்கும் போல..
 
                                                  மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்...

பத்ம விருதுகளும் பாலிடிக்ஸும்


 
 
பத்மஸ்ரீ விருது பரிந்துரைப் பட்டியலில் என்னுடைய பெயர் இருந்தது. நான்தான் எனக்கு விருது வேண்டாம் என்றேன் என நீண்ட விளக்கம் ஒன்றை ஜெயமோகன் அளித்துள்ளார். விருதை ஏற்றுக் கொண்டால் தனது நேர்மை எதிரிகளால் கேள்விக்குட்படுத்தப்படும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
 
ஜெயமோகன் இந்துத்துவா ஆதரவாளர் என விமர்சிக்கப்படுகிறவர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்து வருகிறார். இப்போது பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டால் மோடி அரசு ஜெயமோகனின் இந்துத்துவா செயல்பாடுகளுக்காக விருது வழங்கியது என்பார்கள் எதிரிகள். ஆகவே விருதை ஜெயமோகன் மறுத்துள்ளார்.
 
மோடி அரசுக்கு எதிராக எழுத்தாளர்கள் தங்களின் சாகித்ய அகதாமி விருதுகளை திருப்பி ஒப்படைத்த போது, அவர்கள் இடதுசாரி அரசியலை முன்னிலைப்படுத்துவதாகவும், காங்கிரஸ் அனுதாபிகள் எனவும் கொச்சைப்படுத்தி எழுதினார் ஜெயமோகன். மோடி அரசுக்கு எதிராக விருதை திருப்பி அளிப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்றால், மோடி அரசில் விருது பெறுகிறவர்கள் இந்துத்துவா ஆதரவாளர்கள்தானே. ஜெயமோகனின் விமர்சனம் அதைத்தானே சுட்டுகிறது.
 
ஆக, ஜெயமோகனின் விமர்சனமே இப்போது அவருக்கு பூமராங் ஆகியிருக்கிறது.
 
சாகித்ய அகதாமி விருதுகளை திருப்பி ஒப்படைத்ததற்கு எதிராகவும், மோடி அரசுக்கு ஆதரவாகவும் பேரணி சென்ற நடிகர் அனுபம் கெர்க்கு பத்மபூஷன் விருதும், சகிப்பின்மை விவகாரத்தில் அரசுக்கு முட்டு கொடுத்த ப்ரியங்கா சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது..
 
                                                                                                          மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....

அறியா யைனா அனிருத்...?


 
 
பீப்பாடல் காரணமாக தலைமறைவாக இருந்த அனிருத், ஐபா பட விழாவில் கலந்து கொண்டார். கத்தி படத்துக்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
 
மேடையில் பேசிய அனிருத், கொலவெறி பாடல் வெளியானது முதல் கடந்த டிசம்பர்வரை அவரைப் பற்றி அவதூறுகள் பரப்பப்பட்டதாக உருகினார். கேட்டவர்களுக்கு நெகிழ்ந்திருக்கும். ஆனால், உண்மை என்ன?
 
ஆண்ட்ரியாவுடன் அந்தரங்கமாக முத்தமிட்டுக் கொண்டதை படம் எடுத்து இணையத்தில் அனிருத்தே வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆண்ட்ரியாவின் அனுமதி இல்லாமல் படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்டார். பிறகு, இணையத்தில் ஆபாச பாடலை வெளியிட்டதற்காக அனிருத் மீது போலீஸில் புகார் தரப்பட்டு, அனிருத்தின் தந்தை தனது அருமை மகனுக்காக கமிஷனர் அலுவலகத்தில் மன்னிப்பு கடிதம் எழுதித் தந்தார். கடைசியாக பீப் பாடல் விவகாரம். 
 
இப்படி ஒவ்வொருமுறையும் தனது விடலை வாலை அசைத்துவிட்டு, அவதூறு கிளப்புகிறார்கள் என்று எப்படி பேச முடிகிறது இவரால்? கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி படத்தில் ஆடிவிட்டு, மக்களுக்காக முட்டி தேய நடனமாடினேன் என்று சிம்புவால் தியாகி ஆக முடிகிறதில்லையா?
 
இவர்கள் நம்மை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?