சினி பாப்கார்ன் - பிரேம்ஜி போட்ட நாய் வேஷம்

ஜே.பி.ஆர்.| Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (09:50 IST)
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலால் திரைத்துறை ரணகளமாகக் கிடக்கிறது. விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழின்னு கொஞ்சம் தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்துக்கு வந்து, விஷாலே வெளியே வான்னு ஒருத்தர் குரல்தர மற்றவர்கள், பொட்டைப் பயல் விஷாலே வெளியே வா என்று கோரஸ்பாட, இதென்ன கலைத்துறையா இல்லை கழிச்சடையான்னு யாருக்கும் சின்னதா ஒரு சந்தேகம் வந்திருக்கும். இந்த கூட்டத்தில் சேரனெல்லாம் இருந்ததுதான் ஜீரணிக்க முடியாத விஷயம்.

 
ஆம்பளை படத்துல நடிச்சா மட்டும் பத்தாது ஆண்மை வேணும் என்று ஒரு கோஷ்டி லோகிய வியாரத்தில் இறங்கி ஏரியாவை  நாறடித்தது. தாணு ஆதரவாளர்கள் இப்படியே பேசினால் விஷால் அணி சிரமமே இல்லாம ஜெயிச்சு வந்திடும்.
 
தாணு விஷாலை விஷம்னு சொல்ல, ஆமா விஷம்தான்... கழுத்துல விஷம் வச்ச சிவன்னு இயக்குனர் மிஷ்கின் அதை  திருப்பிப் போட்டு பேசுனது செம ட்விஸ்ட். என்ன இருந்தாலும் இயக்குனர்களுக்கு இருக்கிற டைமிங்கும் ரைமிங்கும் தயாரிப்பாளர்களுக்கு வராதில்லையா.
 
ஒருபக்கம் இப்படி கோஷம் பேராட்டம்னு கொலவெறியில் இருந்தால் மறுபக்கம் முன்னாள் காதலி வரலட்சுமியின்  கையெழுத்து இயக்கத்துக்கு தேடிச் சென்று ஆதரவு அளித்தார் விஷால். பட், முன்னாள் காதலி இவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கலையாம். பழைய கோவம் அவ்வளவு சீக்கிரம் போகுமா?
 
சண்டை சச்சரவு பகுதியை ஒதுக்கி வச்சு ஸ்டுடியோ பக்கம் போனா, சிம்பா படம் பத்திதான் குசுகுசுக்கிறார்கள். சிம்பா  இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதருக்கு பிரேம்ஜி மேல என்ன காண்டோ. சிம்பாவில் அவரை நாயாக நடிக்க வச்சிருக்கார். காமெடி இல்லீங்க, உண்மையாகவே. அதாவது படத்தின் ஹீரோ பரத்தின் கண்ணுக்கு பிரேம்ஜி நாயாகத்தான் தெரிவாராம். அதுக்காக  பிரேம்ஜிக்கு நாய் கெட்டப் போட்டு படமாக்கியிருக்காங்க. ஒரு காட்சியில் பத்து பதினைஞ்சு நாய்கூட இவரையும் நடிக்க  வச்சிருக்காங்களாம். கேட்கிறப்பவே காமெடியா இருக்கு. இந்த படம் மட்டும் ஹிட்டானா பரேம்ஜி கூட ஜோடியா நடிக்க த்ரிஷா  ஆசைப்பட்டாலும் ஆச்சரியமில்லை. த்ரிஷா ஒரு நாய் சினேகிதியாச்சே.
 
அறிவழகனுக்கும் சரி, அருண் விஜய்க்கும் சரி, குற்றம் 23 ஒரு அக்னி பரீட்சை. அருண் விஜய்க்கு ஒரு ஹீரோவா தன்னை  நிலைநாட்டிக்கணும், அறிவழகனுக்கு இயக்குனரா தன் திறமையை மீண்டும் வெளிக்காட்டிக்கணும். அவங்க மனசுப்படியே மகத்தான ஓபனிங்கை பெற்றது படம். ஆனா, லாரன்ஸ் வடிவத்தில் வந்திருக்கு ஆபத்து. குற்றம் 23 படம் ஓடுற தியேட்டரில் பெரும்பாலானவற்றை லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா ஸ்வாஹா செய்துடுச்சி. பல தியேட்டர்கள் காட்சி எண்ணிக்கையை குறைச்சிருக்காங்க. இதனால் அப்செட்டில் இருக்கு குற்றம் 23 டீம். நல்ல ஓடுற படத்தை தூக்குனா துக்கம்  வரத்தானே செய்யும்.
 
நாம ஏற்கனவே பார்த்த சிம்பா படத்துக்கே வருவோம். அந்தப் படத்தோட விழாவுல நீயா நானா பார்த்துக்கலாம்னு தமிழ்ராக்கர்ஸுக்கு ஓபன் சேலஞ்ச்விட்டார் விஷால். எந்த காரணம் கொண்டும் சிம்பா இணையத்துல வராதுன்னும் சொன்னார். இதுதான் இப்போ சிம்பா தயாரிப்பாளருக்கு ராத்தூக்கத்தை தொலைய வச்சிருக்கு. அவர் பாட்டுக்கு சவால்விட்டு சும்மா கிடந்த சங்கை ஊதிட்டார். தமிழ்ராக்கர்ஸ் டென்ஷனாகி படத்தை இணையத்துல ஏத்திட்டுதான் மறுவேலைன்னு இறங்கிட்டா  என்கிறது?
 
விஷால்... சவால் விடுறப்ப சம்பந்தப்பட்டவங்க பிபியை எகிற வைக்காதீங்க.


இதில் மேலும் படிக்கவும் :