1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (12:23 IST)

காரிய தடைகளை நீக்கும் விநாயக பெருமான் வழிபாடு !!

எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபட்டு ஆரம்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.


ஏனெனில் செய்யும் வேலையில் வெற்றியில் முடிய வேண்டும் என்பது தான் அந்த காரணம். எந்த காரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால், அந்த காரியத்தின் மீது என்ன மாதிரியான தடைகள் வந்தாலும் அதை நீக்கி, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

உடல் மற்றும் மன ரீதியான சோர்வையும் போக்கி உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்வார். விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், முக்திக்கு தடையாக இருக்கிற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழியும்.

விநாயகப் பெருமான் விசாலமான அறிவையும் புத்திக் கூர்மையையும் கொடுப்பார். விநாயகருடைய அடையாளமாகக் கருதப்படுகிற யானையின் தலை என்பது பேரறிவினுடைய குறியீடாகக் கூறப்படுகிறது. ஆன்மீக வழியில் சாதுவான குணங்களுடைய அழைத்துச் செல்லக்கூடியது விநாயகர் வழிபாடு.