1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Do you know what are the best remedies for Varahi...?

வாராஹிக்கு உகந்த நைவேத்தியங்கள் என்ன தெரியுமா...?

வாராஹி
இன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது , பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.


ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும். வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும். மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப் பெருக்கு ஏற்படும். நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு,தாமரைத்தண்டு,வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.

நைவேத்தியங்கள்: தொல் எடுக்காத மிளகு சேர்த்த உளுந்து வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம். மாதுளம்பழம் மிகச் சிறப்பு.

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்கள் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம். வராஹி சித்தி அர்ச்சனையில் உள்ள மந்திரங்களைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்.

ஸ்ரீ மஹாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள்: ஸ்ரீ மஹாவாராஹியின் 12 நாமங்களைக் காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-02-2022)!