1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (12:18 IST)

சிவபூஜையில் முக்கிய இடம் வகிக்கும் வில்வம் இலை !!

சிவபூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தை தாண்டி சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு.


நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.  ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.  கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும். இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை. ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன்.

வில்வம் பழதின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவையாக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.