விபூதியை எந்த விரல்களால் வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்...?
கடவுள் தரிசனத்தின் பிரசாதமான விபூதியை எடுக்க நாம் பயன்படுத்தும் விரல்களை பொருத்து தீமைகள் மற்றும் நன்மைகள் உள்ளது.
கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும்.
கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால், அது தீராத நோயை ஏற்படுத்தும்.
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசிக் கொள்வதால், பொருட்கள் நாசமாகும்.
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால், நிம்மதியின்மை உண்டாகும்.
மோதிர விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டால், அது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
சுண்டு விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் வைத்தால், அது கிரக தோஷத்தை ஏற்படுத்தும்.
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.
வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்று கொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக் கொள்ள வேண்டும்.
'நீறில்லா நெற்றி பாழ்' என்கிறாள் அவ்வைப்பாட்டி. "மந்திரமாவது நீறு' என்று திருநீற்றின் மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர்.