வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தாமரை மணிமாலையை கொண்டு லட்சுமிதேவியை வரவழைக்க வேண்டுமா...?

தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அருள் சாதனங்கள் என அழைக்கப் படுகிறது.

லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால் தாமரை விதைகளில் செய்யப்பட்ட தாமரை மணிமாலை வைத்திருப்பது லட்சுமிதேவியை நம்முடைய வீட்டில் வரவழைக்க  செய்யும். 
 
அளப்பரிய நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணிமாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், குடும்பங்களில் ஒற்றுமை இல்லாமல் இருப்பது, சகோதரர்களிடையே ஏற்படும் பிரச்சனைகள் என எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது  இந்த தாமரை மணிமாலை.
 
இந்த தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்களும் அதிக அளவில் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. நம்பிக்கையோடு வைத்திருந்தால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் வீட்டை நிரப்பும்.
 
தாமரை மணி மாலை பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது. இந்த பரிகார முறையை வியாழ கிழமைகளில் மட்டுமே செய்யவேண்டும். எதிர்பாராத பணவரவு  வந்தால் அது ஒரு சிறு தொகையாக இருந்தாலும் கூட அதைக் கொண்டு மட்டுமே இதை செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
 
குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை. பணம் வந்தவுடன் செய்யலாம். எந்த நேரமானாலும் ஆண் பெண் இருவரும் செய்யலாம். இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் வியாழக்கிழமைகளில் எதிர்பாராத பணவரவு சிறு தொகையாக இருந்தாலும் சரி பெரிய தொகையாக இருந்தாலும் சரி அதில் ஒரு சிறு பகுதியை தனியாக  எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் போட்டு கிழக்குநோக்கி ஏதேனும் ஒரு ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து உங்கள் வலது கையை வைத்து 108 முறை தாமரை  மணிமாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
 
அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவேண்டும். ஒரு முறை செய்தால் போதும் இது நம்முடைய இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.