செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:01 IST)

காமதேனு சிலையை வீட்டில் வைப்பதால் செல்வ வளத்தை பெருக்குமா...?

வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளின்படி காமதேனு சிலையை வீட்டில் வைப்பது நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடியது. இது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும், சந்தோஷமான வாழ்க்கையையும் கொடுக்கும்.


வாஸ்து சாஸ்திரத்தின் படி காமதேனு பசு மற்றும் கன்று சிலையை உங்களுடைய வீட்டில் வைக்க சிறந்த இடம் வடகிழக்குப் பகுதி. வடகிழக்கு பகுதியில் வைக்க முடியாதவர்கள் காமதேனு சிலையை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் வைக்கலாம்.

வீட்டின் வாசலில் காமதேனு சிலையை வைக்கலாம். இது உங்கள் வீட்டில் செல்வம் மற்றும் செழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. காமதேனு சிலையை  உங்களுடைய வீட்டில் வைக்கும் பொழுது வெள்ளியால் ஆன காமதேனு சிலையை வைப்பது மிகவும் சிறந்தது.

குறிப்பாக வீட்டு பூஜை அறையில் ஒரு சிலையை வைப்பதற்கு வெள்ளியால் செய்யப்பட்ட காமதேனு சிலையே சிறந்தது. அதிகப் பணம் கொடுத்து வெள்ளி காமதேனு சிலையை வாங்க முடியாதவர்கள், பித்தளை அல்லது செம்பால் செய்யப்பட்ட விலை குறைந்த காமதேனு சிலையையும் உங்களுடைய வீட்டில் வாங்கி வைக்கலாம்.

காமதேனு சிலையை வீட்டில் சரியான திசையில் வைக்கும் பொழுது அது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். செல்வத்தை அள்ளிக்கொடுக்கும். வீடு செழிப்பால் நிறையும். வீட்டில் எப்பொழுதும் சமாதானம் குடியிருக்கும். எடுக்கும் காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

அதிக செல்வ வளத்தைப் பெறவேண்டும் என நினைப்பவர்கள் காமதேனு சிலையை உங்களுடைய வீட்டில் வாங்கி வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.