வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அமாவாசை தினத்தில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுப்பது ஏன்....?

அமாவாசை தினத்தில் விரதம் இருந்து குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும்.

மந்திர தீட்சை பெற்றவர்கள் அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு தங்களின் விருப்பங்கள் நிறைவேற விரும்புபவர்கள், அமாவாசை நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, தங்களின் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் அனைத்தும்  நிறைவேறும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
 
நமது முன்னோர்கள், அமாவாசை தினத்தன்று நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அமாவாசை தினத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும். அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும். 
 
அமரத்துவம் பெற்ற முன்னோர்களுக்குத் தர்ப்பண வழிபாடுகளைச் செய்யச் சொல்லி அறிவுறுத்துகின்றனர். இதனால் கிடைக்கும் புண்ணியம் மிக மேலானது என்கிறது கருடபுராணம்.
 
சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் ஆகியவை அனைத்தும், நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்விக்கும். மகிழ்ந்து  அவர்கள் தரும் ஆசி, நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.
 
எனவே வரும் தை அமாவாசைத் திருநாளில் புண்ணிய நதி தீரங்களிலோ, அல்லது உங்கள் வீடுகளிலோ, அவரவர் வழக்கப்படி முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளைச் செய்துலோகா, ஏழேழு தலைமுறைக்கும் புண்ணிய பலன்களைப் பெற்று வாழுங்கள்.