திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

எந்த இலையில் அரச்சனை செய்தால் என்ன பலன்...!

சங்கடஹர சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பை தரும். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தி அன்று எந்த இலையில் அரச்சனை செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
மாவிலை: நமது பக்கம் நியாயம் இருந்தும், தேவை இல்லாத வம்பு வழக்குகளில் சிக்கிக்கிண்டிருந்தால் மாவிலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
 
வில்வல் இலை: நமது குடும்பத்திலும் வாழ்விலும் இன்பம் என்றும் நிலைத்திருக்க வில்வ இலையை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
 
ஊமத்தை: மனிதர்களாக பிறந்தவர்களுக்கு சில தீய குணங்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் நம்மிள் இருக்கும் பொறாமயை அழிக்க ஊமத்தை இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
 
நெல்லி: வருமானம் பெருக செல்வ செழிப்போடு வாழ நெல்லி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
 
நாயுருவி: நமது தோற்றமானது அடுத்தவரை ஈர்க்கும் வண்ணம் இருக்க, முகத்தில் வசீகரம் பெறுக, நாயுருவி இலை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.