1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிறப்பு பெற்ற அனுமனின் நவ வடிவங்கள்!

ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர். நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் அனுமனின் வடிவங்களுள் ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவை என்கின்றன புராணங்கள்.
ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வடிவமும் தனித்தனியே வெவ்வேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டாலும், நவகிரக தோஷங்கள் நீங்கவும், நல்லன யாவும்  கிட்டவும் அருள்வது இந்த நவ மாருதி தரிசனம். நிருத்த பால, பக்த வீர, யோக, சிவபிரதிஷ்டா, சஞ்சீவி, கல்யாண, பஞ்சமுக என அனுமனின் நவ வடிவங்கள்  போற்றப்படுகின்றன.
 
இதனை ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீவீர ஆஞ்சநேயர், ஸ்ரீவிம்சதிபபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீஆஷ்டாதசபுஜ ஆஞ்சநேயர், ஸ்ரீசுவர்ச்சலா ஆஞ்சநேயர், ஸ்ரீசதுர்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீதுவாத்ரிம்சத்புஜ ஆஞ்சநேயர், ஸ்ரீவானராகார ஆஞ்சநேயர் எனவும் நவ வடிவங்களாகத் துதித்துப் போற்றுகின்றனர்.
 
அந்த நவ மாருதி வடிவங்களுள் கல்யாண ஆஞ்சநேயரான சுவர்ச்சலா ஆஞ்சநேய வடிவம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது கல்யாணம் என்பதற்கு சர்வ மங்களம் என்றும் அர்த்தம் உண்டு. இவரை தரிசிப்பது மணப்பேறும், மழலை பாக்கியமும் தரும் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.