1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வீட்டில் செல்வம் பெருக வெள்ளிக்கிழமையில் இதை செய்யுங்கள் !!

லட்சுமி தேவி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். வெள்ளிக்கிழமை அன்று தாமரை மலரால் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியமும் கிட்டும்.

லட்சுமி தேவிக்கு வாசனை நிறைந்த பொருட்கள் என்றால் பிடிக்கும். எனவே வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு நல்ல வாசனைமிக்க சந்தனத்தைப் படைப்பதன் மூலம், அதிர்ஷ்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
 
வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு எட்டுவிதமான எண்ணெயால் காலையும், மாலையும் தீபம் ஏற்றி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். ஏனெனில் இம்மாதிரி செய்வது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். இதனால் லட்சுமி தேவியின் மனம் குளிர்ந்து, அவரது முழு ஆசீர்வாதத்தைப் பெறலாம்.
 
வெள்ளிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சந்தன நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை பயன்படுத்தினால், வேலை மற்றும் வணிகத்தில் இரட்டிப்பு முன்னேற்றத்தைக் காணலாம்.
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பசு மாட்டிற்கு வைக்கோல் மற்றும் வெல்லத்தை கொடுப்பது நல்லது. இதனால் லட்சுமி தேவியின் அருள் முழு குடும்பத்திற்கும் கிடைக்கும்.