செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வாராகி தேவியின் அருளைப்பெற என்ன செய்யவேண்டும்...?

வாராகி அன்னை அருளை பெற முக்கிய விதி புறம்பேச கூடாது. மற்றவர் படும் துயரம் கண்டு நாம் அதில் குளிர்காய கூடாது. இந்த எதிர்மறை எண்ணம் இருந்தால் அன்னை அருள் நம்மை என்றைக்கும் நெருங்காது. ஆயிரம் மந்திரங்கள் லட்ச எந்திரமும் வைத்திருந்தாலும் அன்னை பார்வை நம்மீது படாது.

வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள். இப்படி தன்  பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ  இவையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான்.
 
வாராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்கள் வலிமையை குறைக்கும். 
 
எனக்கு இது வேண்டும் தாயே கொடு என கேட்கலாம். ஆனால் வேறொருவரை கெடு என்று இந்த தேவியிடம் வேண்டக்கூடாது. ஏனெனில் கண்ணிமைபோல்  காக்கும் அன்னைக்கு நம் சத்ருபத்தி தெரியாமலா போய்விடும். நமக்கு தீங்கு செய்பவர்களை அவள் பார்த்து கொள்வாள். 
 
வாராகி அருள் நமக்கு இருக்கிறது என்ற கர்வமும், அதனால் மற்றவர்களிடம் தன்னை பற்றி பெருமித பேச்சு இருக்கவே கூடாது. வாராகி நமக்கு முன்கூட்டியே நிகழ்வுகளை எண்ணவடிவாக சொல்லி எச்சரிப்பாள். அதை உள்வாங்கும் மனதூய்மை நமக்கு என்றும் வேண்டும். 
 
மற்றவர்களுக்காக உங்கள் பிரார்த்தனை அன்னையிடம் அமைந்தால் இது மிகப்பெரிய வலிமை. அன்னை உடனடியாக அவன் மனதில் குடிகொண்டு நம் ஆசையை  நிறைவேற்றுபவள்.
 
மனத்தில் பொய், வஞ்சம், இதெல்லாம் இருக்காமல் இருப்பது நல்லது. நெறி எனும் முக்கிய விதியை யார் கடைபிடிக்கின்றார்களோ. அவர்களிடத்தில் பிரியம் கொண்டு அன்போடு அருளாட்சி செய்பவள் தான் இந்த வாராகி அன்னை.