செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நவராத்திரி விரதத்தினை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்...?

நவராத்திரி விரதமானது புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் தோன்றும் சக்தியை குறித்து செய்யப்படும் விரதமாகும். புரட்டாசி மாதம் வளர்பிறைப் பிரதமை தொடங்கி நவமி வரை ஒன்பது நாளும் விரதம் மேற்கொள்ளப்படும்.
இந்த 9 நாட்களும் காலை நேரத்தில் எழுந்து குளித்து கும்பம் வைத்து தவறாமல் பூசை செய்தல் வேண்டும். வீடுகளில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் கொண்டு கொலுவைத்தல் வேண்டும்.
 
விரதத்தினைப் பொறுத்தவரை, காலை மாலை என இரு வேளை உணவு உண்ண வேண்டும். காலையில் பூஜை செய்யும் முன்பே சாப்பிட்டுவிட வேண்டும், பின்னர் குளித்து விட்டு பூஜை செய்தல் வேண்டும். பகல் பொழுதில் உணவு உண்ணக் கூடாது இரவு பூஜை  முடிந்தபின் பால் பழம் உண்ணுதல் வேண்டும்.
 
ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று முழு நேரமும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது  மணிக்குமுன் பூஜை செய்தல் வேண்டும்.
 
விஜயதசமி அன்று காலையில் உணவுப் பதார்த்தங்கள் தயார் செய்து சக்திக்கு படைத்து பூஜை செய்தல் வேண்டும். இந்த விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும்.