எந்த கிழமைகளில் எந்த கடவுளுக்கு விரதம் இருப்பதால் என்ன பலன் கிடைக்கும்....?

ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன் நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும். திங்கட்கிழமை விரதம் இருந்தால் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
 
செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கும்.
 
புதன் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப்  பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு. பலன்கள்: புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
வியாழக் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும். வியாழக்கிழமை நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குவது சிறப்பு. 
 
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும். 
 
சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு  வஸ்திரம் அணிவித்து  வழிபடுவது சிறப்பாகும். மேலும் திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.


இதில் மேலும் படிக்கவும் :