1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ராகு கேது தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...?

ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். இந்த ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்கிறது ஜோதிட நூல்கள். 
 
சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக திருநாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை.
 
ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் கேது உதித்தார். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் கேதுவை வழிபடுவது  சிறப்புடையதாகும்.
 
இந்த ராகு கேது இந்த இரண்டு கிரகங்கள் நம்மை பயமுறுத்துவது அல்ல. உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை  நிச்சயமாக அடைய முடியும்.
 
காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் விலகும். கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் தோஷ நிவர்த்தி பெறலாம்.
 
அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும். ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
 
காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.