1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ருத்ராட்சத்தை அணிவதால் கிடைக்கும் பயன்கள் என்ன...?

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ‘ருத்ராட்சம்’ என்று கூறப்படுகிறது. சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள், தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவ சின்னம் ‘ருத்ராட்சம்.’ ‘ருத்திரன்’ என்பது சிவபெருமானையும், ‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும்.

ஒரு முக ருத்ராட்சத்தை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ பயன்படுத்தி வந்தால், ஜாதகத்தில் சூரியனால் ஏற்பட்ட பாதகங்கள் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம்  போக்கும் சக்தி படைத்தது. ஆன்மிக தன்மை அளிக்கும் ஆற்றல் உண்டு. மிகவும் அரிதாக கிடைப்பது ஒரு முக ருத்ராட்சம் (ஏக முகம் ருத்ராட்சம்). மோட்சம்  தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது. அருவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது.
 
இரு முகம் கொண்ட ருத்ராட்சம்அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டது. இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது. சந்திரனின் ஆதிக்கம் பெற்றது. பத்ம புராணம் இதை அக்னியின் ஆதிக்கம் பெற்றதாக கூறுகிறது. பசுவை கொன்ற பாவத்தை போக்கும்.
 
குடும்பம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடத்தில் நல்ல உறவை விரும்புபவர்கள், இரு முக ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். ஆன்மிக முன்னேற்றத்தை அளிக்கக் கூடியது. இருமுக ருத்ராட்சத்தால் ஆன மாலையை அணிந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
 
மூன்று முக ருத்ராட்சம் செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது. இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் உடலில் உள்ள சோர்வு, பலவீனம் நீங்கும். இது சிவனுடைய  மூன்று கண்களாக விளங்கும் சோம, சூரிய, அக்னி என்ற 3 அம்சங்களுடைய வடிவங்களைக் குறிப்பதாகும்.
 
பிரம்ம தேவனின் அருள் பெற்றது, இந்த ருத்ராட்சம். இதன் ஆதிக்க கிரகம் புதனாக இருப்பதால், இதனை அணிபவர்களுக்கு 4 திசைகளிலும் புகழை உண்டாக்கும்.  பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற 4 நிலைகளையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது.
 
இந்த ருத்ராட்சம் குருவின் ஆதிக்கம் பெற்றது. அகோரம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்களையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது. ஐந்து முக ருத்ராட்சத்தை அணிபவருக்கு, அகால மரணம் கிடையாது.