செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ராம நாமத்தை சொல்லுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். மன அமைதியும், வாழ்வில் வளமும் சேர்க்கும். 

ஸ்ரீ ராம மந்திரத்தை சொன்னால் அனைத்து கடவுள்களும் உங்கள் வீடு தேடி வருவர். இதனால் மன அமைதியும், உங்கள் வாழ்க்கையில் வளமும் பெருகும். 
 
ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம்  என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மனிதனிடம் இருக்கும் மனிதத்தை அழிக்கக் கூடிய விஷயங்களை எல்லாம் ‘ராமா’ என்ற ஒற்றை பெயர் செய்வதால், நாம் வாழ்வின் அனைத்து வித நன்மைகளையும் அருளையும் பெற முடியும்.
 
ராம நாமத்தை சொல்லி ராமனிடம் நாம் சரணடைய நமக்கு மோட்சத்தை கொடுப்பார்.
 
ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:
 
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே 
ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ.