1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Wealth Multiply The slogan to say...!

செல்வ வளம் பெருக சொல்ல வேண்டிய ஸ்லோகம்...!

ஸ்லோகம்
நமது வீடுகளில் மகாலஷ்மி கடாட்ஷம் பரிபூரணமாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை கூறி வந்தால் வற்றாத செல்வ வளம் நமது வீடுகளில் நிறையும்.
ஸ்ரீ லட்சுமி ஸ்லோகம்:
 
அச்வாரூடம் மஹாலஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம்
ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸ சோபிதாம்!
ஸ்ர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம்
ஐச்வர்யதாம் ஸ்ரீலஷ்மீம்ஸர்வ ஸொபாக்ய ஸித்தயே
 
இந்த ஸ்லோகத்தை வாசிக்க இயலாதவர்கள் கீழ்க்கண்ட பிரார்த்தனையை பக்தியுடன் தினமும் மூன்று முறை வாசித்தாலே போதுமானது.
 
குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலட்சுமியே!
இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவறே!
தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே!
செல்வத்தைத் தரும் ஐஸ்வர்யலட்சுமியே!
எங்களுக்கு சகல செளபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.
அடுத்த கட்டுரையில்
வாஸ்து : வீட்டில் அலமாரி அமைக்கும் முறை...