1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. ஹோலி ஸ்பெஷல்
Written By

வண்ணப் பொடிகளை தூவி வண்ண மயமாக கொண்டாடப்படும் ஹோலி

வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையண்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
ஹோலி பண்டிகையின்போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து அனைவரும் ஒன்று என என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.
 
ஹோலிக்கு முதல் நாள் ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைப்பெறும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.
 
ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.