1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விளக்கை துலக்குவதற்கு கூட நேரம் காலம் உள்ளதா...?

வீட்டில் மங்களகரமானது விளக்கு. பூஜையறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வழிபடுவதே பெரும் ஆனந்தத்தை தரும் ஒரு விசயமாகும். அப்படிப்பட்ட விளக்கை  சுத்தம் செய்வதற்கு சில நாட்கள் உண்டு.

முதலில் விளக்கை ஏனோ தானோ என்று துலக்கி வைக்கக்கூடாது. நன்கு சுத்தமாக பளிச்சிடும் வண்ணம் துலக்க வேண்டும். பச்சை பயிறு, பச்சரிசி, எலுமிச்சைத் தோல், வெந்தயம் இவற்றை உலரவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை கொண்டு துலக்கினால் புத்தம்புது விளக்கு போல் பளிச்சிடும். இதில் சிறிது சிகைக்காய் சேர்த்து துலக்கினால் மேலும் சிறப்பான ஒளியை தரும். 
 
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்துவிளக்கை துலக்க வேண்டும். செவ்வாய், புதன், வெள்ளி இந்த நாட்களில் குத்துவிளக்கை  துலக்குவது கூடாது.
 
திங்கள் கிழமை அன்று இரவிலிருந்து புதன்கிழமை இரவு வரை குத்துவிளக்கில் குபேர மற்றும் குக குரு தாட்சாயணி போன்ற தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாக ஐதீகம் உள்ளது. 
 
எனவே இந்த காலகட்டத்தில் துலக்கினால் அவர்களின் சக்தி எல்லாம் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் வெள்ளியன்று துலக்குவதால் குபேர சங்க நிதி யட்சிணி போன்ற தெய்வம் சகல வளங்களையும் அதில் குடியிருந்து அந்த குடும்பத்திற்கு நன்மையை நல்குவதாக ஐதீகம் உள்ளது.

எனவே செவ்வாய், புதன், வெள்ளி இந்த மூன்று நாட்களிலும் குத்து விளக்கை துலக்குவதை தவிர்ப்பது அந்த குடும்பதிற்கு மேன்மையை தரும்.