1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் !!

முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும்  என்பது ஐதீகம்.

முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.
 
முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன்  அழித்தார்.
 
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
 
கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினந்தோறும் அதிகாலையில் படிப்பவர்களது அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும்.
 
முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டார்.
 
அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவார். மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.